முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

என் நண்பனுக்குப் பாராட்டுகள்: கமல் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி

விக்ரம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், கமல்ஹாசனை நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டில் கெளரவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்தது குறிப்பிடித்தக்கது. தொடர்ந்து, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விக்ரம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக் கமல் கமல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து  கெளரவப்படுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில், சல்மான் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, என் அன்புக்குரிய சல்மான் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் குழுவினருடன் எனது நண்பன் கமல்ஹாசனை  நேற்றிரவு என் வீட்டில் கொண்டாடி கெளரவித்தேன். எனது நண்பனுக்குப் பாராட்டுகள். மோர் பவர் வித் யூ எனப் பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அண்ணா யுனிவர்சிட்டியில் விண்டேஜ் கார் ஷோ

Halley Karthik

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

G SaravanaKumar

சிறப்புத்திறன் கொண்ட குழந்தை விமானத்தில் பயணிக்க மறுப்பு – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்

Web Editor