பல்வேறு வகையான உணவு வீடியோக்கள் சமூக வலைதலத்தில் பரவி வரும் நிலையில் தற்போது ’சோவ் மெய்ன் ஆம்லெட்’ என்ற தெருவோர உணவு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையம் மக்கள் வினோதமான உணவுகளைத் தயாரிக்கும் வீடியோக்களால் பரவி வருகிறது. சமீப காலமாக, தெருவோர உணவு பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சில உண்மையான பயமுறுத்தும் சம்பவங்களைப் பார்த்தோம். இருப்பினும், உணவுப் பிரியர்களின் பசி வேட்கை அடங்குவதாகத் தெரியவில்லை.
இதற்கு உதாரணமாக உணவு விற்பனையாளர் ஒருவர் ‘சோவ் மெய்ன் ஆம்லெட்’ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
ஃபுட் பவுல்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியில், ஒரு உணவு விற்பனையாளர் ‘சோவ் மெய்ன் ஆம்லெட்’ தயாரிப்பதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு தட்டில் சோவ் மெய்ன் நிரப்பப்பட்டிருப்பதைக் காணலாம். அதன் பிறகு அவர் சோவ் மெய்னை ஒரு கொள்கலனில் ஊற்றி, வினோதமான கலவையைத் தயாரிக்கத் தொடங்குகிறார்.
இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த டிஷ் நிச்சயமாக பேஸ்புக் பயனர்களை வெறுப்புடைய செய்ததோடு, அவர்கள் கருத்துகள் பிரிவில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற உணவுகளை யார் சாப்பிட்டார்கள் என்றும் பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.







