மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தையை  ஓடஓட விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி…

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தையை  ஓடஓட விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ் மற்றும்
அவரது மனைவி நளினி. இவர்களின் முதல் மகன் கல்லூரியிலும் மற்ற இருமகன்கள்பள்ளியிலும் பயின்று வருகின்றனர். இவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்க கூடிய அஜய் மற்றும் பவானி ஆகிய தம்பதிகளுக்கும் இடையே அடிக்கடி சில பிரச்னைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அலெக்ஸின் மகன்களிடம் அஜய் என்பவர் நேற்று இரவு பிரச்சனை செய்ததாக தெரிகிறது. இதனால் அலெக்ஸ் அஜய்யை அடித்தநிலையில் அஜய் தனது நண்பர்களை வரவழைத்து அலெக்ஸை ஓட ஓட விரட்டி  கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் மார்பில் பலமாக தாக்கியும் உள்ளார்.

தடுக்க வந்த அலெக்ஸின் இரண்டாவது மகனுக்கும் கையில் கத்தி குத்தியதில் பலத்த
காயம் ஏற்படவே அங்கிருக்க கூடியவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புது வண்ணாரப் பேட்டை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த அலெக்ஸை மீட்டு  சிகிச்சைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸில் வைத்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அலெக்ஸிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காயமடைந்த இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.