மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் உயர்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்படத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நன்னெறியை…

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் உயர்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்படத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நன்னெறியை வளர்க்க வேண்டும். பெரியவர்களிடம் எவ்வாறு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை திரைப்படங்கள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கும் வகையில் இன்று சிறார் திரைப்படம் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் மாணவ, மாணவியர்களின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய நிச்சயம் இந்த சிறார் திரைப்படத் திருவிழா உதவும். திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்து மாணவர்கள் தரும் விமர்சனங்கள் குறித்து மாவட்டம் வாரியாக, மாநில வாரியாக சிறந்த விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்படும் முதல் 15 விமர்சனங்கள் எழுதிய மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.