திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை

திருப்பதி திருமலை பகுதியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  சிறுத்தை ஒன்று தூக்கி சென்று…

திருப்பதி திருமலை பகுதியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  சிறுத்தை ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியதி.  இந்த சம்பவத்தில்  சிறுமி லக்ஷிதா உயிரிழந்தார். சிறுமி லக்‌ஷிதா உயிரிழந்த சம்பவம் திருப்பதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மலை காட்டில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. திருப்பதி திருமலை இடையே உள்ள சாலைகள் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் வழித்தடங்கள் ஆகியவற்றின் அருகே சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமலை வனப்பகுதியில் நடமாடும் விலங்குகளால் பாதையாத்திரை செல்வோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களை சிறுத்தைகள் இழுத்துச் செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

எனவே, பாதுகாப்பு கருதி திருமலை பகுதியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருமலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.