கிணற்றில் விழுந்த குட்டி யானையை உயிருடன் மீட்டு தீயணைப்புத் துறையினர் வனப்பகுதியில் விட்டனா்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது யானை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர் பகுதியில், வெள்ளையன் மகன் செல்வம், விவசாய கிணற்றில் யானை குட்டி ஒன்று விழுந்து விட்டது.
இது தொடர்பாக ஒகேனக்கல் வன குழு தலைவர் அய்யனார் அளித்த தகவலைத் தொடர்ந்து, ஒகேனக்கல் வனத்துறையினர் மற்றும் பென்னாகரம் தீயணைப்பு மீட்புப் படையினர் இணைந்து, கிணற்றிலிருந்து யானை குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குட்டி யானையை சரக்கு வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதியான சின்னாறு வனப்பகுதியில் விடுவதாகத் தெரிவித்து கூட்டிச் சென்றனர். மேலும், கிணற்றில் விழுந்த குட்டி யானை, எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
–கா.ரூபி








