சென்னையில் மாநகர பேருந்தில் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்த குறைந்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 6வது மொக தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது வரை 1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்று, 50,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசியே இதுவரை எடுத்துக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதேபோல போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மெகா தடுப்பூசி முகாமின் ஒரு பகுதியாக சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் தி.நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்து M 19-Bயில் ஏறி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மாநகர பேருந்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.