28.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்; செப்டம்பர் 15ம் தேதி தொடக்கம்?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பேசிய நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்?’ – முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி’

முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading