வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் சுமார் ரூ.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் துறை சார்பில் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள், வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான கல்விசார் கட்டடங்கள் திறப்பு விழா தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பனையின் சிறப்பினை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற காலப்பேழை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை (http://tnagriculture.in/mannvalam) அவர் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், உதயநிதி, டி ஆர் பி ராஜா, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






