தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள லிடியன் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும்! குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.







