வெள்ள நிவாரண நிதிக்கு 1 மாத ஊதியத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் புயல், வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு…

சென்னையில் புயல், வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும்,  தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன.  கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 1 மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினார்.

அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது 1 மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.