வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்று சொல்லக் கூடியவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மண்ணடியில் வேருக்கு விழா என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஸ் கூறியதாவது:
இந்த அன்பில் மகேஸ், மாண்புமிகுவாக பள்ளிக் கூடங்கள் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருப்பது அன்பு உடன் பிறப்புகள் தான். அமைச்சர் சேகர் பாபுவை, சேகர் பாபு அல்ல செயல் பாபு என முதலமைச்சர் கூறிய பாராட்டு பத்திரத்திற்கு ஈடாக வேறு யாராலும் கூற முடியாது.
துறைமுகம் தொகுதி நங்கூரம் போன்றது. திமுக பக்கமே நிற்கும். சென்னையில் இருக்கும் மக்கள் கருணாநிதியின் சொந்த பிள்ளைகள் போன்றவர்கள். Creator of Modern Tamilnadu ஸ்டாலின் தான். இன்னும் 50 ஆண்டுகளுக்கும் நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்று சொல்லக் கூடியவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என்றார் அன்பில் மகேஸ்.