முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓஹோ நம்ம ஊரு… செம்ம ஜோரு…

பொழப்ப தேடி சென்னைக்கு வரவங்க மொதல்ல தொலைக்கிற விஷயம் எதுன்னா அது தூக்கம்தான். ஆமாங்க, வாழ்க்கை செட்டில் ஆயிடும், நிம்மதியா இருக்கனும்னு இந்த பெரு நகரத்துக்க வரவங்க அனேகம் பேர் சொல்றது இதுதான். நல்லா சாப்டுட்டு, காலாற நடந்துட்டு கத பேசி முடிச்ச அப்புறம் நேரமே தூங்க போறது எல்லாம் ஊரோட போச்சுன்னு பொலம்புறவங்க நிறைய பேரை நான் கண்டதுண்டு.

ரோட்டு கடை சாப்பாடு, பெரும்பாலும் சோறுக்கு பதில் டீ குடிச்சியே கழித்த நாட்களெல்லாம் சென்னையின் நினைவுகள். சரி உணவுதான் அப்படி இருக்கு நல்லா தூங்கவாவது செய்யலாம்னு பாத்தா கொசு தொல்ல ஒரு பக்கம், பக்கத்துல படுக்குறவனோட கொறட்டை சத்தம் இன்னொரு பக்கம்…எப்பா சகியாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல ஏறிதான ஆகனும் அப்படிங்குற கதையா சென்னைக்கு வந்தா இதெல்லாம் சகிச்சுதான ஆகனும். இந்த லைன்ல சென்னைவாசிகளுக்கு புது வரவா ஒரு பாட்டும் லிஸ்ட்ல ஏறி இருக்கு. அட ஆமாங்க இப்ப எல்லாம் செல்போனோட அலாரம் சத்தம் கேக்குதோ இல்லையோ ஆனா “ஓஹோ நம்ம ஊரு… செம்ம ஜோரு”ங்கிற பாட்டு மட்டும் ஒவ்வொரு காலையும் தவறாம கேட்குதுன்னு சென்னைவாசிகள் சோஷியல் மீடியாவுல கதற ஆரம்பிச்சுட்டாங்க.

அட பாட்டு கேட்டா பரவல்லை ஆனால, ஐபிஎல் ஆர்.ஜே.பாலாஜியோட ரன்னிங் கம்ன்ட்ஸ் மாதிரி திரும்ப திரும்ப நாள் முழுக்க பாட்டு மண்டைக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கு. எது எதுக்கோ WHO அறிவுரையும் ஐடியாவும் கொடுக்குறாங்க இந்த ‘லூப்’க்கு ஒரு ஐடியா சொல்லமாட்டாங்களான்னு பேஸ்புக்குலையும், டிவிட்டர்லையும் WHO-வை டேக் பண்ணி கேட்டுட்டு இருக்காங்க சென்னைவாசிகள்.

கொரோனா அதிகரிச்ச காலத்துல வீடு வீடா வந்து குப்பைகளை கொண்டு செல்லும் தூய்மை பணியாளர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க விசிலுக்கு பதில் இந்த ஐடியாவ அறிமுகப்படுத்துச்சு மாநகராட்சி. ஐடியா என்னவோ நல்லாதான் இருந்துச்சு, லூப் ஆகாத வரைக்கும்.

ஆனா நம்ம மக்களுக்கு இந்த பாட்டு இவ்வளவு தலைவலியா இருக்குதுன்னு புரியுர அளவுக்கு, தூய்மை பணியாளர்களோட வாழ்கையை புரிஞ்சுக்க முடியலங்குறத நெனைச்சா ரொம்ப கவலையா இருக்குன்னு இன்னொரு குரூப் யதார்த்தத்தை சொல்ல… ரெண்டு குரூப்பும் சண்டை போட்டுக்காத கொறதான் மிச்சம். இன்னமும், இந்த பணியாளர்களை பரிதாபமாக பார்த்து, பழைய சோறு குடுத்து அனுப்புறதோட நம்ம கடமை முடிஞ்சதுன்னு நெனைச்சு இருக்காங்கனு தொடங்கி…

கான்டிராக்ட் முறை, ஊதிய பிரச்னை, உழைப்பு சுரண்டல் இதெல்லாம் இவங்களும் எதிர்கொள்றாங்க. மட்டுமல்லாம, வர்கத்துடன் சேர்ந்து சாதிய வன்மம் என இரட்டை குழல் துப்பாக்கியை எதிர்த்து போராடுறாங்க. இதை எதிர்த்து நடக்குற போராட்டங்களை இந்த மக்களும் புரிஞ்சுகிட்டு ஆதரவு தரனுமுங்குறதுதான் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையா இருக்குன்னு போற போக்குல உணர்ச்சி பொங்க பேசிட்டு போயிட்டு இருக்கு இந்த குரூப்.

எது எப்படி இருந்தாலும் காலையில தூங்கும்போது செத்தநேரம் அனத்தாம தூங்கவிடுங்கபா! என்பதுதான் சென்னைவாசிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

ஓஹோ நம்ம ஊரு… செம்ம ஜோரு ஓஹோ…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாநிலங்களவை தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

EZHILARASAN D

சொத்துத் தகராறு: மாறி மாறி தாக்கிக்கொண்ட உறவினர்கள்

Gayathri Venkatesan

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

Jayapriya