வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் ‘பத்துதல. 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் official ரீம்மேக் தான் இப்படம்.
இதில் சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் portion கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்த்தனை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இடம்பெறும் இரண்டாம் portion முழுவதும் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்குகிறார். பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்த இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இப்படித்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். சிம்புவின் தந்தையான டி.ராஜேந்திரக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் படம் மேலும் தாகமதமாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
https://twitter.com/StudioGreen2/status/1542531876388163584
இதைத்தொடர்ந்து பத்து தல படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் அப்டேன் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது படக்குழு. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முன்பே டிசம்பர் 14ம் தேதியன்றே படம் வெளியாகும் எனக்கூறி அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.







