திமுக முப்பெரும் விழா-முன்னோடிகளுக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் அருகே பட்டபுதூரில் இன்று திமுக முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான…

திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் அருகே பட்டபுதூரில் இன்று திமுக முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

புதுச்சேரி நிர்வாகி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.