பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஜனதா தர்பார்: மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்

மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்றுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் முதல்…

மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்றுள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று திங்கள் கிழமைகளில் மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.  அதன்படி முதலாவது ஜனதா தர்பார் நிகழ்ச்சி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஜனதா தர்பார் என்ற குறை தீர்க்கும் நிகழ்வை கடந்த ஆட்சியின் போது நிதிஷ்குமார் நடத்தினார். அப்போது மக்கள் தங்கள் குறைகளை முதலமைச்சரிடம் நேரடியாக தெரிவித்து குறைகளுக்குத் தீர்வு கண்டனர். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இது போன்ற நிகழ்வை முதலமைச்சர் நடந்துகின்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.