மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் #MKStalin!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை…

Chief Minister #MKStalin leaves for Delhi to pay tribute to Manmohan Singh's body!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார்.

இதையும் படியுங்கள் : கைகளில் கருப்பு பட்டை… #ManmohanSingh மறைவுக்கு இந்திய வீரர்கள் மரியாதை!

இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.