முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று கேரள செல்கிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மாநில எல்லையோர விவகாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களின் தீர்வுக்காக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். காலை 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதலமைச்சரை கேரள திமுக அமைப்பு செயலளார் முருகேசன் தலைமையில் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை பிற்பகலில் சந்திக்கிறார். அப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்கிறார். அப்போது இரு தலைவர்களும் பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி, நெய்யாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்ககின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram