முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் செய்திகள்

சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்த அவர், இன்று காலை அங்கு முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ஈஸ்வரன் வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் விவாதித்ததோடு, அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் Fintech மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் குழுவை அனுப்பி வைக்குமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேசி வருவதாக அமைச்சர் ஈஸ்வரனிடம் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, அமைச்சர் ஈஸ்வரன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கை பெறுவதில் தாமதம் கூடாது’

Arivazhagan Chinnasamy

“மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை” – கோவை மாவட்ட எஸ்பி தகவல்

EZHILARASAN D

தமிழகத்திலும் நுழைந்தது புதுவகை கொரோனா… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

Saravana