பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் புதிய திரைப்படமான டைகர் திரைப்படத்தின் ஃப்ஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா டைகர் ராமேஸ்வர ராவ் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது அகில இந்திய அளவில் 5 ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் ரவிதேஜா டைகர் சோன் என குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
70-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடும்படியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வம்சி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன் வெளியான வால்டர் வீராய்யா திரைப்படம் ரவிதேஜாவின் மார்க்கெட்டை பெரிதுபடுத்தியுள்ளது. ஆனால் கடைசியாக ரவிதேஜா நடித்த ராவணசூரா திரைப்படமானது விமர்சன ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் பெரும்பொருட்செலவில் உருவாகி வரும் டைகர் திரைப்படத்தில் ரவிதேஜா நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது அக்:20தேதி வெளியாவதாக ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கட்டாகுஸ்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ரவிதேஜா என்பது குறிப்பிடத்தக்கது.







