கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து காட்டூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஆகியோர் நாளை திறந்து வைக்கவுள்ள நிலையில், காட்டூருக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டகம் மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா







