உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!

உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில்  இந்திய  வீரர்…

உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில்  இந்திய  வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனுக்கு நிகராக விளையாடிய பிரக்ஞானந்தா இறுதியாக போராடி தோற்றார். இதனால் உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பாட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையின் பெருமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா. உலக கோப்பை செஸ் போட்டியில் உங்கள் சிறந்த செயல்திறன் பாராட்டுக்குறியது. உலகில் 2 மற்றும் மூன்றாம் தரநிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இறுதி முடிவு சாதகமாக இல்லாத போது, உங்கள் சாதனை 140 இந்தியரின் கனவுகளில் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா. உங்கள் வெள்ளிப் பதக்கம் மற்றும் #FIDECandidates  போட்டிக்கான நுழைவு ஆகியவை வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதே போன்று, முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வீடியோ வெளியிட்டு பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டியுள்ளார்.

அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். எனக்கு பிறகாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும், கெண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகின் டாப் 20 வீரர்களை வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஹிக்காரு நகமுரா, ஃபேபியானோ கருவானா உள்ளிட்டோருடன் வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பெருமை சேர்த்தார். அவர் இன்று மேக்னஸ் கார்ல்சனுடன் தோல்வியடைந்தார். அவரை நிறுத்திய ஒரே வீரர் மேக்னஸ் கார்ல்சன் மட்டுமே. அவர் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். அவரது எதிர்கால பயணங்கள் மிக சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.