என் அப்பா வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்த தேசிய விருது கிடைத்துள்ளது என கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டியின் மகள் மொக்கத்தாய் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தெசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியுள்ளது.
இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக நல்லாண்டியின் மனைவி சிவனம்மாள் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் எங்க பார்த்தாலும் நல்லாண்டி, நல்லாண்டி என்ற பெயர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே போன்று தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து நல்லாண்டியின் மகள் மனம் திறந்துள்ளார். நல்லாண்டியின் மகள் மொக்கத்தாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என் அப்பா வாழ்ந்த விவசாயி வாழ்க்கைக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி. விவசாயிக்காக கஷ்டப்பட்டவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. உண்மையாகவே விவசாயியாக வாழ்ந்தவர், என் அப்பா. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு விருது கிடைத்தது சந்தோசமாக உள்ளது. இவ்வாறு மொக்கத்தாய் கூறினார்.







