ஹாக்கி உலகக் கோப்பையை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ஆக்கி உலகக்கோப்பை 2023 ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கோப்பை சென்னை கொண்டுவரப்பட்டது.  2023 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா…

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

ஆக்கி உலகக்கோப்பை 2023 ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கோப்பை
சென்னை கொண்டுவரப்பட்டது.  2023 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஆக்கி உலக கோப்பை நடைபெற உள்ளது.

அதனை ஒட்டி ஆக்கி கோப்பையை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச்
செல்லப்படுகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமான மூலம் ஆக்கி கோப்பை சென்னை கொண்டுவரப்பட்டது.


சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஹாக்கி உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்பு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஹாக்கி வீரர்கள் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இன்று மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.