திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.273.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,000,168 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.68.76 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வழங்கினார்.

இதையும் படியுங்கள் : “பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதுகுறித்து அவர் கூறியதாவது,

  • ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும்.
  • குமாரமங்கலம் பகுதியில் சீராக மின்விநியோகம் செய்யும் வகையில் ரூ.6 கோடியில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும்.
  • நல்லகொண்டா பகுதியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
  • திருப்பத்தூர் நகர மைய பகுதியில் ரூ.18 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
  • ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.