தஞ்சாவூரில் ரூ.133 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 13 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!!

தஞ்சாவூரில் 133 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 13 திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்,…

தஞ்சாவூரில் 133 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 13 திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 61 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடம், ஆம்னி பேருந்து நிறுத்தம், 14 மாநகராட்சி பள்ளிகள் சீர்மிகு பள்ளிகளாக மாற்றம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பொது நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.