முதலமைச்சர் #ArvindKejriwal திடீர் ராஜினாமா – டெல்லி அரசியலில் பரபரப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று…

Chief Minister #ArvindKejriwal Sudden Resignation - Delhi Politics Upset!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று ஆறு மாதங்களுக்கு பிறகு செப்.13 வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மற்றும் பிற தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இன்னும் 2 நாள்களில் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி, ஆலோசித்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “ நான் நேர்மையானவன் என மக்கள் நினைத்தால் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.