முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் திரிபுராவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளது. இந்த இருகட்சிகளுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதிய 1 மணி நேர நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

அண்மைச் செய்தி: ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தங்கள்  கட்சிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில்  வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பதிவிட்டதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தலைக்கவசம் அணிந்திருந்தும் சொமாட்டோ ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

EZHILARASAN D

விவசாயியாக மாஸ் காட்டும் தோனி; துபாய்க்கு அனுப்பி வைக்க தயாராகும் காய்கறிகள்!

Jayapriya

பணமோசடி வழக்கில் கைதான ICICI வங்கியின் முன்னாள் CEOக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

Niruban Chakkaaravarthi