முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் : 9-வது சுற்று போட்டிகளின் விவரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளனர்.

 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில், ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர். மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அர்மேனியாவின் சர்ஜிசியன் கேப்ரியல் இடையிலான ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது. கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஹரிகிருஷ்ணா 102-வது காய் நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

 

இந்நிலையில், 9-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் ஓபன் பிரிவில் இந்தியா A அணி – பிரேசில் அணியையும், இந்தியா B – அஜர்பைஜன் அணியையும், இந்தியா C – பராகுவே அணியையும் எதிர்கொள்கிறது. இதேபோல், மகளிர் பிரிவில் இந்தியா A – போலந்து அணியுடனும், இந்தியா B – ஸ்விட்சர்லாந்து அணியுடனும், இந்தியா C – எஸ்டோனியா அணியுடனும் மோதுகிறது.


தரவரிசை பட்டியல் அடிப்படையில் ஓபன் பிரிவில் அர்மேனியா – 15, இந்தியா B – 14, உஸ்பெகிஸ்தான் – 14, நெதர்லாந்து – 13, ஈரான் – 13, அஜர்பைஜன் – 13, இந்தியா A – 12, துருக்கி – 12, அமெரிக்கா – 12, ஜெர்மனி – 12, இந்தியா C – 10 இடத்தில் உள்ளன.

தரவரிசை பட்டியல் மகளிர் பிரிவில் இந்தியா A – 15, ஜார்ஜியா – 14, உக்ரைன் – 13, போலந்து – 13, பல்கேரியா – 13, கஸகஸ்தான் – 13, மங்கோலியா – 13, அஜர்பைஜன் – 13, அர்மேனியா – 12, ஸ்பெயின் – 12, இந்தியா B – 11, இந்தியா C – 11 ஆகிய இடங்களில் உள்ளன.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!

Vandhana

‘கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு’ – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

’ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது’: பிராவோ

Halley Karthik