வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமால்லபுரத்தில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொது பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்துள்ளனர். போட்டிக்கு இதுவரை மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்துள்ளனர். உலகிலேயே முதன் முறையாக அதிக நாடுகள் பதிவு செய்துள்ள நிலையில், உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க உள்ளது செஸ் ஒலிம்பியாட் போட்டி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
343 அணிகள் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இவரை 2 முறை வீழ்த்திய தமிழக வீரர் பிரஞாநந்தாவும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு படுமி ஒலிம்பியாட் போட்டியில் பொது பிரிவில் 184 அணிகளும் பெண்கள் பிரிவில் 150 அணிகளும் பங்கேற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.