செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள்; தலைமை செயலாளர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசைனை நடத்துகிறார்.  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசைனை நடத்துகிறார். 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைப்பெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கூடுதலாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 3 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒலிம்பியாட் பாடல் வெளியிடுதல் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்ற்ன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.