முக்கியச் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் – இன்று 8வது சுற்று ஆட்டம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 7 சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 8வது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது. ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு நேற்று 7வது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

8வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா A அணி அர்மேனியா அணியையும், இந்தியா B அணி அமெரிக்கா அணியையும், இந்தியா C அணி பெரு அணியையும் எதிர்கொள்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா A அணி உக்ரைன் அணியையும், இந்தியா B அணி குரோஷிய அணியையும், இந்தியா C அணி போலந்து அணியையும் எதிர்கொள்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 44வது போட்டியின் 7 ஆம் சுற்றுகள் முடிவின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் எந்த நாடுகள் எந்த இடத்தைப் பிடித்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

புள்ளிப் பட்டியல் ஓபன் பிரிவு

1. அர்மேனியா – 13
2. உஸ்பெகிஸ்தான் – 12
3. இந்தியா B – 12
4. இந்தியா A – 12
5. அமெரிக்கா – 12
6. ஜெர்மனி – 12
7. கசகஸ்தான் – 12
8. பிரான்ஸ் – 11
9. ஈரான் – 11
10. நெதர்லாந்து – 11

19. இந்தியா C – 10

மகளிர் பிரிவு

1. இந்தியா A – 14
2. உக்ரைன் – 12
3. அர்மேனியா – 12
4. ஜார்ஜியா – 12
5. போலந்து – 11
6. அஜர்பைஜன் – 11
7. பல்கேரியா – 11
8. மங்கோலியா – 11
9. கிரீஸ் – 11
10. கசகஸ்தான் – 11
11. இந்தியா C – 11

31. இந்தியா B – 9

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

Halley Karthik

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Arivazhagan Chinnasamy

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

Arivazhagan Chinnasamy