முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் – இன்று 7வது சுற்று ஆட்டம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 7வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். வீரர், வீராங்கனைகள் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டனர். இந்நிலையில், 7வது சுற்றுப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓபன் பிரிவில் இந்தியா A அணி இந்தியா C அணியுடன் இன்று மோதுகிறது. இதில், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், அர்ஜூன் எரிகேசி, நாராயணன், சசிகிரண் (ஓய்வு) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்தியா B அணியுடன் கியூபா அணி மோதுகிறது. இதில், குகேஷ், சரின் நிஹால், பிரக்ஞானந்தா, அதிபன் ரவுணக் சத்வானி (ஓய்வு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியா C அணியுடன் இந்தியா A அணி மோதுகிறது. இதில், சூர்யா சேகர், சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு புராணிக், கார்த்திகேயன் முரளி (ஓய்வு) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மகளிர் பிரிவில் இந்தியா A அணி அஜர்பைஜன் அணியுடன் மோதுகிறது. இதில், கொனெரு ஹம்பி, ஹரிகா துரோணோவள்ளி, வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி (ஓய்வு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியா B அணி கிரீஸ் அணியுடன் மோதுகிறது. இதில், வந்திகா அகர்வால், சவுமியா சாமிநாதன், மேரி அன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக், பத்மினி ரவுட் ( ஓய்வு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியா C அணி ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதுகிறது. இதில், ஈஷா கரவாடே, நந்திதா, பிரத்யுஷா போடா, விஷ்வா வஷ்ணவாலே, சாஹிதி வர்ஷினி (ஓய்வு) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

G SaravanaKumar

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறாரா ரிஷி சுனக்?

Mohan Dass

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

EZHILARASAN D