செஸ் விளையாடுவது நமது மூளைக்கு அமைதியை கொடுக்கும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வேல்ஸ் நிறுவனர் கணேஷ், இயக்குனர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் விக்ரம் அகர்வால், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஜித் குமார் மோஹிந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா மற்றும் இயக்குனர் சங்கர் இருவருக்கும் கௌரவ டாக்டர் விரிவுரையாளர் பட்டம் ஆளுநர் கையினால் வழங்கப்பட்டது. மேலும் இந்த கல்வியாண்டில் 4829 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சிலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ரெய்னா, சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியளிக்கும். நான் வெளிநாட்டில் இருந்ததால் பிரதமர் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை தொலைகாட்சியில் பார்த்தேன். செஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி அனைவருக்கும் எனது வாழ்த்துகள். எனக்கு செஸ் ஒலிம்பியாட்டை நேரில் சென்று பார்க்க ஆசை. ஆனால் மாலை டெல்லி செல்வதினால் காண இயல முடியவில்லை. செஸ் நமது மூளைக்கு அமைதியை கொடுக்கும் விளையாட்டு என்று கூறினார்.
பின்னர் பேசிய இயக்குனர் சங்கர், எனக்கு இந்த விருது வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. பல வகையில் இந்த விருந்து எனக்கு உற்சாகத்தை வழங்குகிறது. மேலும் சினிமா துறையில் பல பிரம்மாண்டமான டெக்னாலஜிஸை உபயோகம் செய்ய மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது என்றார்.
தொடர்ந்து வேல்ஸ் நிறுவனர் கணேஷ் பேசுகையில், வருடம்தோறும் சினிமா மற்றும் பிற துறைகளில் இருப்பவர்களுக்கு வேல்ஸ் டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம், அந்த வகையில் இந்த வருடம் இயக்குனர் சங்கர் மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு பட்டம் வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.