இ சலான் மோசடியை சைபர் மோசடி கும்பல் தொடங்கி இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரை போன்று குறுஞ்செய்தி அனுப்பி கும்பல் பணம் மோசடி செய்வது தெரியவந்துள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகாரப்பூர்வமாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர் “echallan.parivahan.gov.in”. என்ற இணையதள முகவரியையே பயன்படுத்துவார்கள். சைபர் மோசடி கும்பல் https://echallanparivahan.in/ என்ற மோசடி இணையதளத்தின் மூலமாகவும் தனியாக இமெயில் மற்றும் பணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்வதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே போக்குவரத்து அபராதம் விதிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை சரி பார்த்து காவல்துறை அபராதம் விதித்துள்ளதா, அதிகாரப்பூர்வ அபராதம் செலுத்தும் இணையதளமா என சரி பார்த்து பொதுமக்கள் பணத்தை செலுத்துமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.