நிலவில் சல்பர் இருப்பை மீண்டும் ரோவர் உறுதி செய்துள்ள நிலையில், எரிமலை வெடிப்பால் சல்பர் உருவானதா? அல்லது இயற்கையாக சல்பர் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நிலவில் சல்பர் இருப்பை ரோவர் கருவி மீண்டும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ இன்று வெளியிட்டது. எரிமலை வெடிபால் சல்பர் உருவானதா அல்லது இயற்கையாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே எதிர்பார்த்தபடி, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிகான், ஆக்சிஜன் ஆகியவை இருப்பதையும் ரோவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.