#Chennai | ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு – மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்!

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு…

#Chennai | Shooting of Sivakarthikeyan's new film on GST Road flyover - Perungalathur brought to a standstill by the crowd!

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது.

அமரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்த படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘புறநானூறு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமாகும். இதனிடையே தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.