நேபாளத்தில் சாதனை படைத்த சென்னை வீராங்கனைகள்

இந்தியா- நேபால் இடையே நடைபெற்றபோட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனைகள் 14 தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். நேபாளத்தில், இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கும் இடையேயான ஆறாவது நேஷ்னல் விளையாட்டு போட்டிகள்…

இந்தியா- நேபால் இடையே நடைபெற்றபோட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனைகள் 14 தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேபாளத்தில், இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கும் இடையேயான ஆறாவது நேஷ்னல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கோகோ, கராத்தே, சிலம்பம் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் இருந்து கலந்து கொண்ட தனியார் பெடரேஷனை சேர்ந்த 17 பெண்கள் 14 தங்கப்பதக்கமும் இரண்டு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

போட்டிகளுக்கு பின்னர் சென்னை திரும்பிய வீராங்கனைகளுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனைகள் கூறுகையில், “இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே நடந்த அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்தனர். அதோடு இதில் 14 தங்கப்பதக்கமும், இரண்டு வெள்ளி பதக்கமும் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினர். மத்திய, மாநில அரசுகள் உதவியும் ஊக்கமும் அளித்தால் அடுத்தக்கட்ட போட்டிகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறிய அவர்கள், சர்வதேச அளவில் பதக்கங்களை தொடர்ந்து வெல்ல வேண்டும் என்பது எங்களது லட்சியும் எனக் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.