“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கப் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பயணச்சீட்டு வழங்கும் பக்கத்திற்குச் செல்ல முடியும். இந்த பக்கத்தில், பயணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ இரயில் நிலையத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்யலாம். UPI மற்றும் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு கட்டணத்தைச் செலுத்தலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையின் தொடக்கமாக, QR டிக்கெட்டில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இன்று கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Press Release – 03-08-2022 pic.twitter.com/3yuowTfdCG
— Chennai Metro Rail (@cmrlofficial) August 3, 2022