பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையின் 383-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை சார்பில் பழங்கால மிதிவண்டிகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை சுற்றுலா துறை செயலாளர் சந்தர மோகன் மற்றும் இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த மிதிவண்டி கண்காட்சியில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய சைக்கிள்கள் முதல் 90-களில் பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகள் வரை சுமார் 60-க்கும் மேற்பட்ட
மிதிவாண்டிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட பழமையான மிதிவண்டிகளும் இந்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள்
பயன்படுத்தும் மிதிவண்டிகள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் மிதிவண்டிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை செயலாளர் சந்தரமோகன், சென்னை தினத்தை முன்னிட்டு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் குளோபல் ஹெரிடேஜ் ஆப் மெட்ராஸ் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் சைக்கிளிங் செய்யும் போது தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் உள்ள சைக்கிள்கள் வொர்ல்ட் வார் 2 காலத்தில் இருந்தது. இந்த சைக்கிள் கண்காட்சிக்குப் பிறகு மதியம் உணவு கண்காட்சி நடைபெறும் என்றார்.
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அழைத்து செல்லப்படும் என தெரிவித்தார். இவ்வாறு இந்த
இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது வழிகாட்டியும் (guide) உடன் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்









