சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சையைச் சேர்ந்த பிஸ்மில்லா கான், தென்காசியை சேர்ந்த ஹெப்சி பியூலா ஆகியோரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இருவரும் தங்களது உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 870 கிராம் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து இருவரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.