முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கை ரூ. 648 கோடி செலவில் மீட்டெடுக்க திட்டம்

சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கிய திட்டமாகச்  சென்னை கொடுங்கையூர்  குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 5200டன் குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில் பிரதானமாக, குப்பைக் கழிவுகள் கொடுங்கையூர்
குப்பைக் கிடங்கிற்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. நீண்ட காலமாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால் நிலத்தடியில் ரசாயன தன்மை அதிகரித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் கையாளவும், கிடங்கை மறுசீரமைத்து நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் ஐஐடி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைகளின் படி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கு பயோ மைனிங் திட்டத்திற்கு 648 கோடி ரூபாய் செலவில் மொத்தம் ஆறு தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு நிதியாக 25% 160 கோடி ரூபாயிலும், மாநில அரசு 16 சதவீதம் 102 கோடி செலவிலும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 59 சதவீதம் 378 கோடிய என ஒட்டுமொத்தமாக 648.83 கோடி ரூபாயில் இந்த திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 251.9 ஏக்கர் பரப்பளவில் உள்ள 64 ஆயிரம் டன் எடையுள்ள குப்பைகள் பயோ மைனிங் செய்வதற்கு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”உடல்களை அடையாளம் காணமுடியாமல் தவிக்கும் உறவினர்கள்” : ஒடிசாவிலிருந்து நியூஸ் 7 தமிழின் பிரத்யேக தகவல்கள்

Web Editor

சூரிய கிரகணம்; நாளை திருப்பதி கோவில் நடை அடைப்பு

G SaravanaKumar

ஷேர்சேட்டில் நம்பர் 1 இடத்தில் நியூஸ்7 தமிழ்

EZHILARASAN D