சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சில நாட்களில் இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது சென்னை மாநகராட்சி.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி , வளசரவாக்கம் சோழிங்கநல்லூர் , அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்நிலையில் புதியதாக சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி பொறுபேற்ற பின்னர் இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3,200 சாலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொறியாளர் அடங்கிய குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அந்த குழு அளித்த அறிக்கையின் படி மேற்குறிப்பிட்ட 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் , அவற்றை சீரமைப்பதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. நிலையில் தொடர்ச்சியாக போடப்பட்ட 660 ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.








