சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்…..!

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக தொழில்துறையில் இந்தியாவின் முன்னில மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, இது திராவிட மாடல் அரசு செய்த மாபெரும் வெற்றியாகும். இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாற உள்ளது. தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் காணும் வகையில் சென்னை நகரம் முழுவதும் மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற வழிவகை செய்த முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.

தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த அவர் அதனை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் வாசித்தார். அதில் அவர் துறை வாரியாக 90 அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, வரும் 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.