பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை, சென்னையில் புத்தகக்காட்சி நடத்த, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புத்தகக்காட்சி ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில், கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அண்மைச் செய்தி: பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்
இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தகக்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.