நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும்: வி.கே.சசிகலா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், அண்ணாவின் படத்துக்கு மலர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் வி.கே.சசிகலா. அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும், தேர்தலுக்கு பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், அதிமுக விரைவில் தம்மிடம் வரும் எனவும் வி.கே.சசிகலா தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: சென்னை, புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி!

மேலும், அதிமுகவினர் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது என வி.கே.சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார். 8 மாத கால ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது, அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.