சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு திருவிழா மற்றும் கொடியேற்றம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணித் திருதளத்தலம் கடந்த 1972 -ஆம் ஆண்டு சென்னை நகரத்தின் அடையாளமாகவும் கிறிஸ்தவர்களும் பிற சமய சகோதர சகோதரிகளுக்கும் ஆசீரை வாரி வழங்குகின்ற புனிதத் தலமாக கட்டப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் 50-வது ஆண்டுத் திருவிழா இன்று
தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் தொடக்க விழாவாக அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளமுள்ள திருக்கொடியை பவனியாகக் அர்ச்சிக்கப்பட்ட பின் கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மயிலை உயர் 75 அடி கம்பத்தில் பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமியால்
ஏற்றிவைக்கப்பட்டது.
விழா நடைபெறும் இந்த 11 நாட்களும் சிறப்பு தினங்களாகக் கொண்டாடப்படும். இறைவனின் அன்பும் இரக்கமும் அன்னையின் பக்தர்கள் நிறைவாய்ப் பெற்றிட இத்திருவிழா நாட்களில் சிறப்புத் திருப்பலிகளும் செப வழிபாடுகளும் காலையில் இருந்து மாலை வரை நடைபெறும்.
சிறப்பு நவநாட்களில் மாலை 5.30 மணி திருப்பலி முடிவில் அன்னையின் தேர்பவனியும் நடைபெறும். டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஏனைய உயர்மறைமாவட்ட குருக்களோடு இணைந்து கூட்டுத் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியும் நடைபெறும்.
செப்டம்பர் 8-ஆம் தேதி அன்னையின் பிறந்ததாளும், செப்டம்பர் 7-ஆம் நாள் மாலை 5.30
மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திருத்தலத்தின் 50-ம் ஆண்டு விழாத் தொடக்கமும் கொண்டாடப்படும். அன்று விடியற்காலை 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். காலை 7:45 மணி ஆங்கிலத் திருப்பலியும் பின்னர் தமிழ் திருப்பலியும், அன்னைக்கு முடிசூட்டுவிழாவும் நடைபெறும். மாலை 5.30 மணி திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
இந்த விழாவற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து நடைப்பயணமாக
வந்து பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த விழாவில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான தங்கும் இட வசதி,குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை வசதிகள் ஆலயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க கூடுதலான கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி
கொண்டு பத்திற்கு மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில்
அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தது பெரும் சிக்கலாக ஆக இருந்தது.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதால்
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக தவற விட்டு பின்னர்
காவல்துறையிடம் தெரிவித்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை அடுத்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு குழந்தையாக காவல் துறையினர் மீட்டனர்.
அன்னை வேளாங்கண்ணி திருவிழாவிற்கு இவ்வளவு பொதுமக்கள் கூட்டம் வரும் என்று யாரும் நினைக்காத படி இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாடல்நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.