#Chennai | #TVK மாநாட்டிற்கு செல்லும் வழியில் விபத்து – இளைஞர் ஒருவர் பலி!

தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மோதிய விபத்தில் தவெக மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில்…

#Chennai | Accident on way to #TVK conference - one youth killed, another seriously injured!

தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மோதிய விபத்தில் தவெக மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்திசையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்பொழுது டிஎம்எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பியபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் இருசக்கரம் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றதாக தெரியவந்தது. மேலும், இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.