#Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது தொடர்பாக…

#Chennai | 10th incident in 2 months… Pandemonium at #AnnaUniversity!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: 100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம் | சோஷியல் மீடியாவை மிரள வைத்த #GOAT ரொனால்டோ!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.