மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு, மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல்…

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு, மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே இயக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து10 நாட்களில் மத்திய அரசு பதில் அளிப்பதாக கூறியுள்ள நிலையில், அவர்களது பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார்.

முன்னதாக கடந்த 27-ம் தேதி திமுக எம்பி டி.ஆர். பாலு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மத்திய அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே இயக்குவது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.